முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்ட விரோத பண பரிமாற்றம் : சோனியா மருமகனிடம் 2-வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை

வியாழக்கிழமை, 7 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி :  சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2-வது நாளாக நேற்றும் விசாரணை நடத்தினர். 

மன்மோகன்சிங் தலைமையில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடந்தது.

இந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தியின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா காங்கிரஸ் கட்சி செல்வாக்கை பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகள் மற்றும் சட்ட விரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களில் அரசு நிலத்தை தனது நிறுவனத்துக்கு வாங்கி ராபர்ட் வதேரா அதிக விலைக்கு விற்றதாக முதலில் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. பிறகு அவர் ராணுவம், பெட்ரோலியம், நிலக்கரி உள்பட பல்வேறு அமைச்சகங்களில் ஒப்பந்தம் பெற்றுக் கொடுக்க பெரிய அளவில் லஞ்சம் பெற்றதாக பரபரப்பு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

மேலும் அவர் லஞ்சப் பணத்தில் வெளிநாடுகளில் குறிப்பாக லண்டனில் சொத்துக்கள் வாங்கி இருப்பதாக கூறப்பட்டது.

இது தொடர்பாக மத்திய அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.சமீபத்தில் இந்த விசாரணைக்கு வருமாறு அமலாக்கத்துறை சார்பில் ராபர்ட் வதேராவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜராக மறுத்து வந்தார்.

இதையடுத்து அமலாக்கத்துறை அவரை கைது செய்யும் என்று தகவல் வெளியானது. உடனடியாக ராபர்ட் வதேரா டெல்லி ஐகோர்ட்டில் முன் ஜாமீன் கோரி மனு செய்தார். கடந்த 2-ந்தேதி இந்த மனுவை விசாரித்த டெல்லி கோர்ட்டு பிப்ரவரி 16-ந்தேதி வரை ராபர்ட் வதேராவை கைது செய்யக்கூடாது என்று உத்தரவிட்டது.

அதே சமயத்தில் அமலாக்கத்துறை முன்பு ராபர்ட் வதேரா ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் அமலாக்கத்துறையிடம் ஆஜராவதை தவிர வேறுவழியில்லை என்ற நிலை அவருக்கு ஏற்பட்டது.
நேற்று பிற்பகல் 3.47 மணிக்கு டெல்லி ஜாம் நகரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேரா ஆஜரானார்.

கடந்த மாதம் 23-ந் தேதி காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட பிரியங்கா தனது வெள்ளை நிற டொயட்டோ காரில் ராபர்ட் வதேராவை அழைத்து வந்து அமலாக்கத்துறை அலுவலகத்தில் விட்டு சென்றார்.  .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து