முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-வது டி-20 போட்டியில் நியூசிலாந்துக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா ? ஆக்லாந்தில் இன்று நடக்கிறது

வியாழக்கிழமை, 7 பெப்ரவரி 2019      விளையாட்டு
Image Unavailable

ஆக்லாந்து : நியூசிலாந்து அணியுடனான முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி இன்று பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நியூசி. முன்னிலை...

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 போட்டிக்கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி புதிய சாதனை படைத்தது. மூன்று 20 ஓவர் தொடரில் வெல்லிங்டனில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 80 ரன் வித்தியாசத்தில் தோற்றது. இதன் முலம் 0-1 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது. இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி ஆக்லாந்தில் இன்று நடக்கிறது.

இந்தியாவுக்கு நெருக்கடி...

முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு ரோகித்சர்மா தலைமையிலான அணி பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மீண்டும் தோல்வி அடைந்தால் தொடரை இழந்து விடும். இதனால் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இந்தியாவுக்கு உள்ளது. வெல்லிங்டன் போட்டியில் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என 3 துறையும் மிகவும் மோசமாக இருந்தது. இதனால் இன்றைய போட்டியில் இதை சரி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பந்துவீச்சு ஏமாற்றம்...

டோனி, தவான் மட்டுமே பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டனர். இதனால் மற்ற வீரர்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர். பந்து வீச்சும் ஏமாற்றத்தை அளித்தது. வேகப்பந்து வீரர்கள் ரன்களை வாரி கொடுத்தனர். முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்வியால் இன்றைய ஆட்டத்துக்கான அணியில் மாற்றம் செய்யப்படலாம் என்று தெரிகிறது.

நியூசி. ஆர்வம்...

வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி 2-வது 20 ஓவர் போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றும் ஆர்வத்துடன் உள்ளது. ஒருநாள் தொடரை சொந்த மண்ணில் இழந்ததற்கு பதிலடி கொடுத்து 20 ஓவர் தொடரை வென்று விட வேண்டும் என்ற வேட்கையில் இருக்கிறது. அந்த அணியின் தொடக்க வீரர் டிம் செய் பெர்ட் இந்திய பந்து வீச்சை விளாசி தள்ளினார். இதே போல முன்ரோ, கேப்டன் வில்லியம்சன், டெய்லர் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் நியூசிலாந்து அணியில் உள்ளனர்.

10-வது போட்டி...

இரு அணிகளும் இன்று மோதுவது 10-வது போட்டியாகும். இதுவரை நடந்த 9 ஆட்டத்தில் இந்தியா 2-ல், நியூசிலாந்து 7-ல் வெற்றி பெற்றுள்ளன. இன்றைய ஆட்டம் இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து