முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரெக்ஸிட் விவகாரம்: ஐரோப்பிய கூட்டமைப்பு தலைவர்களுடன் தெரசா மே பேச்சுவார்த்தை

வெள்ளிக்கிழமை, 8 பெப்ரவரி 2019      உலகம்
Image Unavailable

லண்டன், பிரெக்ஸிட்’ விவகாரம் தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஐரோப்பிய கூட்டமைப்பு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து அரசு வெளியேறுவது தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த நாட்டு மக்களில் பெரும்பான்மையானோர் இதற்கு ஆதரவு அளித்தனர். முறைப்படி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கைகளை பிரதமர் தெரசா மே தீவிரப்படுத்தினார்.  ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய பின்னர் பொருளாதாரம், வெளியுறவு கொள்கை என எந்த வகையிலும் இங்கிலாந்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சிறப்பான ஒப்பந்தத்தின் மூலம் ‘பிரெக்ஸிட்’ நிகழ்ந்தாக வேண்டும். 

இதற்காக தெரசா மே ஐரோப்பிய கூட்டமைப்பிடம் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி அதற்கு ஒப்புதலையும் பெற்றார். ஆனால் அந்த ஒப்பந்தம் இங்கிலாந்துக்கு பாதகமானது என கூறி எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது தெரசா மேயின் சொந்தக்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியினரும் போர்க்கொடி உயர்த்தினர். இதனால் அந்த ஒப்பந்தம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது.  ‘பிரெக்ஸிட்’ காலக்கெடு விரைவில் முடிய இருப்பதால் தெரசா மே இக்கட்டான சூழ்நிலையில் உள்ளார். இந்த நிலையில், ‘பிரெக்ஸிட்’ தொடர்பான பேச்சுவார்த்தைக்காக தெரசா மே  பெல்ஜியம் சென்றார். அங்கு அவர் தலைநகர் பிரசல்சில் ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைவர் டொனால்டு டஸ்க் மற்றும் ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் ஜீன் கிளாட் ஆகியோரை சந்தித்து பேச உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து