ராமேஸ்வரத்தில் கலாம் பெயரில் அரசுக்கல்லூரி: பட்ஜெட்டில் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 8 பெப்ரவரி 2019      தமிழகம்
abdul kalam

சென்னை, அப்துல்கலாம் பெயரில் ராமேஸ்வரத்தில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிறுவப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் துணைமுதல்வரும் நிதியமைச்சருமான ஒ.பன்னீர்செல்வம், 2019-20-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில், சமுதாயத்தில் அனைத்துப் பிரிவினரும் குறைந்த செலவில், தரமான உயர்கல்வி பெறுவதை உறுதிசெய்வதற்கான முக்கியத்துவத்தை இந்த அரசு தொடர்ந்து அளித்து வருகிறது. மூன்று பல்வகை தொழில்நுட்பக் கல்லூரிகளை 2018-2019 ஆம் கல்வி ஆண்டில் அரசு நிறுவியுள்ளதுடன், 29 சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைத் தொடங்கவும் அனுமதி வழங்கியுள்ளது.

 2019-2020 ஆம் ஆண்டில், இராமேஸ்வரத்தில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பெயரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிறுவப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பட்ஜெட் அறிவிப்பில் தெரிவித்தார்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து