முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துணை முதல்வர் ஓ.பி.எஸ். தாக்கல் செய்த 8-வது பட்ஜெட்: முதல்வர் இ.பி.எஸ். வாழ்த்து

வெள்ளிக்கிழமை, 8 பெப்ரவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை, தமிழக சட்டசபையில் எட்டாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு முதல்வர் எடப்பாடி வாழ்த்து தெரிவித்தார்.

உற்சாக வரவேற்பு...

தமிழக சட்டசபையில் எட்டாவது முறையாக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முன்னதாக நேற்று காலை 9.58 மணிக்கு ஜெயலலிதா உருவப்படத்துடன் கூடிய சூட்கேஸூடன் முதல்வரும், துணைமுதல்வரும் அவைக்கு வந்தனர். பட்ஜெட் உரை அடங்கிய சூட்கேஸூடன் அவைக்கு வந்த துணை முதல்வரையும், முதல்வரையும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள், மேசைகளை தட்டி உற்சாகமாக வரவேற்றனர்.

சபாநாயகர் அறிவிப்பு...

இதைத்தொடர்ந்து சபாநாயகர் தனபால் அவைக்கு வந்தார். திருக்குறள் கூறி அவையை தொடங்கினார். இதைத்தொடர்ந்து காலை10.01மணிக்கு துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது பட்ஜெட் உரையை தொடங்கினார். பகல் 12.38 மணிவரை சுமார் இரண்டேமுக்கால் மணிநேரம் பட்ஜெட் உரையை வாசித்து முடித்தார். அதைத்தொடர்ந்து அவையை ஒத்திவைத்து மீண்டும வரும் 11ம் தேதி சட்டபேரவை கூடும் என்று சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

முதல்வர் வாழ்த்து...

எப்போதும் பட்ஜெட் கவர்னர் உரைகளை புறக்கணித்து வெளிநடப்பு செய்யும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எம்.எல்.ஏ.க்களுடன் கடைசி வரை அமர்ந்திருந்து துணைமுதல்வர் ஓ.பி.எஸ்-ன் பட்ஜெட் உரையை உன்னிப்பாக கேட்டது, ஆளுங்கட்சி வரிசைக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பட்ஜெட் உரையை முடித்ததும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்து தெரிவித்தனர். துணைமுதல்வரின் பட்ஜெட் உரையை பார்வையாளர் வரிசையில் இருந்து அவரது மகனும் தேனி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளருமான ரவிந்திரநாத்குமார், ஒ.பி.எஸ்ஸின் தம்பி ராஜா, ஆகியோரும் கவனமாக கேட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து