ரஷ்யாவில் கூடாரத்துக்குள் விழுந்த பெண்ணை உயிருடன் தின்ற பன்றிகள்

சனிக்கிழமை, 9 பெப்ரவரி 2019      உலகம்
pigs-eat woman 2019 02 09

மாஸ்கோ : வலிப்பு நோயால் பன்றிக் கூடாரத்துக்குள் எதிர்பாராமல் விழுந்த பெண்ணை, அங்கிருந்த பன்றிகள் உயிருடன் தின்ற சம்பவம் ரஷ்யாவில் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ரஷ்யாவின் மத்தியப் பகுதியில் உள்ள நகரம் உட்மர்ஷியா. அதிலுள்ள மலோபர்கின்ஸ்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பன்றிகள் ஏராளமாக வளர்க்கப்படுகின்றன.அங்கே பண்ணையில் வேலை செய்துகொண்டிருருந்த பெண், விலங்குகளுக்கு உணவளிப்பதற்காக இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.  வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட அவர்,  மயக்கமடைந்து பன்றிக் கூடாரத்துக்குள் விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பன்றிகள், அப்பெண்ணின் தலையை முழுமையாகத் தின்று விட்டன. அதேபோலத் தோள்கள் மற்றும் காதுகளையும் கபளீகரம் செய்துள்ளன. அதீத ரத்த இழப்பால், அப்பெண் உயிரிழந்துள்ளார் என்று அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. உடல்நிலை சரியில்லாததால், இரவில் விரைவில் உறங்கச் சென்ற பெண்ணின் கணவர், அடுத்த நாள்தான் மனைவியின் உடலைக் கண்டுபிடித்துள்ளார்.

இதுகுறித்து பிராந்திய புலனாய்வுக் குழுவின் செய்தித்தொடர்பாளர் கூறும் போது, தடவியல் நிபுணர்களின் கருத்துக்காகக் காத்திருக்கிறோம். விசாரணையின் முடிவில் வழக்கின் உண்மைத் தன்மை வெளிவரும் என்றார்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து