இறந்து போகும் என தெரிந்தும் குழந்தையை பெற்றெடுத்து உறுப்பு தானம் செய்த தாய்

சனிக்கிழமை, 9 பெப்ரவரி 2019      உலகம்
mother donate organs 2019 02 09

வாஷிங்டன் : அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண், தன் வயிற்றில் வளரும் குழந்தை இறந்துபோகும் எனத் தெரிந்தும், அதனை பெற்றெடுத்து உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார்.

அமெரிக்காவில் டேவிஸ் லோவட் - கிறிஸ்டா டேவிஸ் தம்பதிக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 25 - ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. இதற்கு ரைலே ஆர்கேடியா டயன் லோவட் என பெயரிட்டனர். கிறிஸ்டா கருவுற்று 18 வாரங்கள் ஆகியிருந்த நிலையில், அவரது வயிற்றில் இருக்கும் குழந்தை குறைபாடுகளுடன் உள்ளது என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதன்படி பிறக்கும்போதே மிகவும் அரிதான சில பாகங்கள் மூளையில் இல்லாமல் பிறந்துள்ளது. இதனால் மருத்துவர்கள் பெற்றோரிடம், குழந்தை 30 நிமிடத்திற்கு மேல் உயிருடன் இருக்காது என தெரிவித்துள்ளனர். இதனால் இருவரும் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர். ஆனால், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் மருத்துவர்களின் முயற்சியால் ஒரு வாரம் வரை உயிருடன் இருந்தாள். குழந்தை இறந்த பின்பு உடல் உறுப்புகளை தானம் செய்ய நினைத்தால் தானம் செய்யலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

இந்நிலையில் டேவிஸ், லோவட் இருவரும் ஒரு வாரம் மருத்துவமனையிலேயே தங்கி, குழந்தை ரைலே உயிர் பிரியும் வரை கூடவே இருந்தனர். பின்னர் ஆக்ஸிஜனின் அளவு கணிசமாக குறைந்து குழந்தையின் உயிர் பிரிந்தது.இதையடுத்து மருத்துவரின் அறிவுரையின் படி, உயிரிழந்த குழந்தையின் இதயவால்வுகள் இரண்டு குழந்தைகளுக்கு பொருத்தப்பட்டன. கிட்னி மற்றும் பிற உறுப்புகள் மருத்துவ ஆராய்ச்சிக்கு வழங்கப்பட்டன. 

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து