மசூதியில் துப்பாக்கி சூடு நடத்திய வாலிபருக்கு ஆயுள் 40 ஆண்டுகளுக்கு பரோல் கிடையாது: நீதிபதி உத்தரவு

சனிக்கிழமை, 9 பெப்ரவரி 2019      உலகம்
young man gun shoot 2019 02 09

கியூபெக் சிட்டி : கனடாவில் கடந்த 2017- ம் ஆண்டு மசூதியில் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தி 6 பேரை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் கியூபெக் சிட்டியில் உள்ள மசூதியில் கடந்த 2017- ம் ஆண்டு ஜனவரி 29-ம் தேதி மாலை தொழுகை நடைபெற்ற போது, ஒரு வாலிபர் துப்பாக்கியுடன் நுழைந்து, சரமாரியாக துப்பாக்கியால் சுட்டான். இதில், தொழுகையில் ஈடுபட்டிருந்த 6 பேர் உயிரிழந்தனர். 5 பேர் பலத்த காயமடைந்தனர். துப்பாக்கி சூடு நடத்திய வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவன் அலெக்சாண்டர் பிசோனெட் என்பது தெரியவந்தது. அவன் மீது கியூபெக் சிட்டி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின் முடிவில் அவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அத்துடன் 40 ஆண்டுகள் வரை பரோல் பெற முடியாது என்றும் அவர் உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து