தாய்லாந்து பிரதமர் பதவிக்கு இளவரசி மஹிடோல் போட்டி

சனிக்கிழமை, 9 பெப்ரவரி 2019      உலகம்
Ubolratana Mahidol 2019 02 09

பாங்காக் : ராணுவ ஆட்சி நடைபெறும் தாய்லாந்தில் அடுத்த மாதம் பொதுத்தேர்தல் நடக்கிறது. இதில் பிரதமர் பதவிக்கு அந்நாட்டின் இளவரசி உப்லோரட்டனா மஹிடோல் போட்டியிடுகிறார்.

தாய்லாந்தில் பொதுத்தேர்தலை நடத்தும்படி கடந்த மாதம் மன்னர் மகா வஜ்ரலோங்கோன் ஆணை பிறப்பித்தார். அதனை தொடர்ந்தது பிப்ரவரி மாதம் 24 - ம் தேதி பொதுத்தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் சில காரணங்களால் பொதுத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி 500 உறுப்பினர்களை கொண்டு தாய்லாந்து நாடாளுமன்றத்துக்கு அடுத்த மாதம் (மார்ச்) 24-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக தாய்லாந்து இளவரசி உப்லோரட்டனா மஹிடோல் பிரதமர் பதவிக்கு போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான நேற்று முன்தினம் உப்லோரட்டனா மஹிடோல் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.இளவரசி உப்லோரட்டனா மஹிடோல் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்த சில மணி நேரத்தில் தற்போதைய பிரதமர் பிரயாட் சான்ஓசா தானும் களத்தில் இருப்பதாக அறிவித்தார்.இதனால் இந்த பொதுத்தேர்தல் முன் எப்போதும் இல்லாத வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து