நாட்டில் 61 பேரிடம் ரூ.100 கோடிக்கு மேல் சொத்து - வருமான வரித்துறை ஒப்புதல்

சனிக்கிழமை, 9 பெப்ரவரி 2019      இந்தியா
Income-Tax 30-08-2018

புதுடில்லி : நாட்டில் உள்ள, 130 கோடி பேரில், 61 பேர் தான், தங்களிடம், 100 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து உள்ளதாக, வருமான வரி துறையிடம் ஒப்புக் கொண்டுள்ளனர்.
இது குறித்து, மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், லோக்சபாவில் கூறியதாவது:

கடந்த, 2014 -- 15 வரி மதிப்பீட்டு ஆண்டில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்தோரில், 24 பேர் தான், தங்களிடம், 100 கோடிக்கும் அதிகமான சொத்து உள்ளதாக கணக்கு காட்டியுள்ளனர்.இது, 2015- 16ல், 38 ஆகவும், 2017-18ல், 61 ஆகவும் அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து