முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த பரிசீலனை - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

சனிக்கிழமை, 9 பெப்ரவரி 2019      தமிழகம்
Image Unavailable

கோபி : மத்திய அரசு கொண்டு வந்துள்ள 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் குறித்து மாநில அரசு பரிசீலனை செய்யும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

விலையில்லா ஆடுகள்...

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் 174 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். விழாவில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்துகொண்டு இலவச ஆடுகள் வழங்கினர். பிறகு அமைச்சர் செங்கோட்டையன் கோபி கரட்டூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் எம்.ஜி.ஆர். நுழைவு வாயிலையும் பார்வையிட்டார். அதில் காமராஜர் பெயர் பொறித்த கல்வெட்டையும் பார்வையிட்டார். அதன் பிறகு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஊக்கத்தொகை...

கோபி நகராட்சி நுழைவு அலங்கார வளைவில் காமராஜரின் பெயர் பொறித்த கல்வெட்டு இடம்பெறும். காமராஜருக்கு புகழ்சேர்க்கும் அரசாக இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. காமராஜரின் பிறந்தநாளில் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. தேசிய தலைவர்கள் அத்தனை பேருக்கும் புகழ் சேர்க்கின்ற அரசாக இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சுற்றுச்சூழல் துறையில் பல்வேறு மாற்றங்களை உருவாக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தூய்மை பாரதம் இந்தியா என்றாலும் கூட தமிழகம் தான் பாலித்தீன் இல்லாத மாநிலமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அறிவியல் ஆய்வகங்கள்...

பள்ளிக் கல்வித்துறையில் வரும் மார்ச் மாதம் இறுதிக்குள் 1500 பள்ளிகளில் தலா ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கப்படும். மாணவ- மாணவிகளின் வருகை பதிவேடு பயோமெட்ரிக் முறை சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது அரசின் நிதிநிலையை பொறுத்து படிப்படியாக அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும். பள்ளிகளுக்கு தனியாக துப்புரவு தொழிலாளர்களை அமர்த்த முடியாத சூழல் உள்ளது. இது குறித்து அரசு பரிசீலித்து முடிவு எடுக்கும். 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் குறித்து மாநில அரசு பரிசீலனை செய்யும். பொறுத்திருந்து பாருங்கள். நல்ல பதில் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து