இந்தியர் துருவ் படேலுக்கு பிரிட்டனின் உயரிய விருது

ஞாயிற்றுக்கிழமை, 10 பெப்ரவரி 2019      உலகம்
Indian Dhruv Patel award 2019 02 10

லண்டன் : பிரிட்டன் வாழ் இந்து மக்களுக்கு சிறந்த சேவையாற்றியதற்காக, இந்திய வர்த்தகருக்கு அரச குடும்பத்தின் உயர் விருது வழங்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் துருவ் படேல், பிரிட்டனில் வசித்து வருகிறார். பார்மஸி மற்றும் இன்சூரன்ஸ் துறைகளில் வர்த்தகம் செய்து வரும் இவர், ஹிந்துஸ் நெட்வர்க் என்ற தன்னார்வ அமைப்பை நடத்தி வருகிறார். பிரிட்டன் வாழ் இந்து மக்களுக்கு சிறந்த சேவை செய்ததற்காக இவருக்கு, ஆர்டர் ஆப் பிரிட்டிஷ் எம்பயர் என்ற, அரச குடும்பத்தினரின், உயர் விருது வழங்கப்பட்டுள்ளது.

பக்கிங்ஹாம் அரண்மனையில் நடந்த விழாவில், கேம்ப்ரிட்ஜ் கோமகன் இளவரசர் வில்லியம், கவுரவ விருதை துருவ் படேலுக்கு வழங்கினார். ராணி எலிசபெத் பிறந்த நாளை முன்னிட்டு, ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சேவை செய்தவர்களுக்கு இது போன்ற விருதுகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து