என்.டி.ராமராவுக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர் சந்திரபாபு - ஆந்திராவில் பிரதமர் மோடி பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 10 பெப்ரவரி 2019      இந்தியா
pm modii 2018 11 26

அமராவதி : ஆந்திர மாநிலத்தின் குண்டூரில் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் கடலோர முனையத்துக்கு பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார்.

ஆந்திர மாநிலம் குண்டூரில் பாரத் பெட்ரோலிய நிறுவனம் சார்பில் கடலோர முனையம் அமைக்கப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை குண்டூர் வந்தார். அவருக்கு பா.ஜ.கவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் பின்னர், பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் கடலோர முனையத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசியதாவது:-

என்.டி.ராமராவுக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர்தான் சந்திரபாபுநாயுடு. தெலுங்கு தேசம் கட்சியின் தலைவராக வேண்டும் என்ற ஆசையில் மாமானார் என்.டி.ராமராவின் முதுகில் குத்தியவர் சந்திரபாபு நாயுடு. என்.டி.ராமராவின் வழியில் ஆட்சி நடத்துவதாக கூறி சந்திரபாபு நாயுடு ஆந்திர மக்களுக்கும் துரோகம் செய்து விட்டார். அவரது எண்ணங்களை குழி தோண்டி புதைத்து விட்டார். மத்திய அரசு கொண்டு வந்த பல்வேறு நலத்திட்டங்களைத்தான் அவர் காப்பி அடிக்கிறார். ஆந்திர மக்களுக்கு நல்லது செய்வேன் என்று வாக்குறுதி அளித்த அவர் தன்னைத் தானே வளப்படுத்தி கொண்டார். இவ்வாறு மோடி பேசினார்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து