வெற்றியைத் தவற விட்டாலும் இனிய நினைவுகளுடன் செல்கிறோம்: ரோஹித்

ஞாயிற்றுக்கிழமை, 10 பெப்ரவரி 2019      விளையாட்டு
rohit sharma 2019 02 06

ஹேமில்டன் : வெற்றியைத் தவற விட்டது வேதனையளித்தாலும், நியூசிலாந்து பயணத்தில் ஏராளமான இனிய நினைவுகளைச் சுமந்து கொண்டு செல்கிறோம் என்று இந்தியஅணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார்.

தென் துருவ நாடுகளான ஆஸ்திரேலியாவுக்கும், நியூசிலாந்துக்கும் பயணம் மேற்கொண்ட இந்திய அணிக்கு மறக்க முடியாத வெற்றிகள் கிடைத்தன. ஆஸ்திரேலியாவில் வரலாற்று சாதனையாக டெஸ்ட், ஒருநாள் தொடரைக் கைப்பற்றி, டி20 தொடரைச் சமன் செய்தது இந்திய அணி. நியூசிலாந்தில் ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் 10 ஆண்டுகளுக்குப் பின் வென்றது. டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது.கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 4 ரன்களில் இந்திய அணி தோற்றது.

இதுகுறித்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில், இந்த டி20 தொடரை இழந்தது வேதனையளித்தாலும், நாங்கள் மோசமாகத் தோற்கவில்லை. மிகக் கடினமான இலக்கைக் கடைசி வரை துரத்திச் சென்று எட்டாமல் விட்டுவிட்டோம். 213 ரன்களை 20 ஓவர்களில் அடைவது கடினமானது. தோல்வி என்பதைவிட வெற்றியை விட்டுவிட்டோம். கடைசி ஓவரில் பதற்றப்படாமல் யார்கர்களை வீசி நியூசிலாந்து வீரர்கள் கட்டுப்படுத்திவிட்டார்கள். நியூசிலாந்து தொடரில் ஏராளமான நல்ல, சாதகமான விஷயங்கள் நடந்துள்ளன. ஒருநாள் தொடரை சிறப்பாகத் தொடங்கினோம். இந்தத் தொடரில் வீரர்கள் அனைவரும் சிறப்பாகச் செயல்பட்டனர், கடினமாக உழைத்தனர். வருத்தமளித்தாலும், தவறுகளில் இருந்து அதிகமாகக் கற்றுக் கொண்டு, அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வோம் எனத் தெரிவித்தார்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து