ஏலத்தில் விலைக்கு போகாத ஹிட்லர் வரைந்த ஓவியம்

திங்கட்கிழமை, 11 பெப்ரவரி 2019      உலகம்
Hitler drawing 2019 02 11

ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர் வரைந்த ஓவியம் ஒன்று ஏலத்தில் விலைபோகாத சம்பவம் நடந்தது.

ஜெர்மனியின் சர்வாதிகாரியாக விளங்கிய ஹிட்லர் ஓவியம் வரைவதிலும் வல்லவராக இருந்தவர். முதல் உலகப் போருக்கு முன்னர் வரை வறுமைப் பிடியில் இருந்த ஹிட்லர் 2,000 ஓவியங்கள் வரை வரைந்தார். இந்நிலையில் அவ்வப்போது ஹிட்லர் வரைந்த ஓவியங்கள் பிரபல ஏல நிறுவனங்களால் உலகின் பல்வேறு இடங்களில் ஏலத்துக்கு விடப்படும்.

அந்த வகையில் ஜெர்மனியின் நுரம்பெர்க் நகரில் நடத்தப்பட்ட ஏலத்தில் வாடிக்கையாளர்களால் ஹிட்லரின் படம் ஏலத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இதுகுறித்து ஜெர்மனி பத்திரிகை ஒன்று வெளியிட்ட செய்தியில், ஹிட்லர் வரைந்த அந்த ஓவியம் விலைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. அந்த ஓவியத்தின் ஆரம்ப விலை 21,500 டாலராக இருந்தது என்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் ஹிட்லரின் ஓவியங்கள் என்ற பெயரில் போலிகள் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன என்ற செய்தி பரவியதன் காரணமாக இந்த ஓவியம் விலைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து