முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு நபர் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் நிறுத்தமில்லை: காங். உறுப்பினருக்கு அமைச்சர் விளக்கம்

திங்கட்கிழமை, 11 பெப்ரவரி 2019      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : ஒருநபர் குடும்ப அட்டைகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவது நிறுத்தப்படவில்லை என்று காங்கிரஸ் உறுப்பினர் விஜயதரணிக்கு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் விளக்கமளித்தார்.

காங். உறுப்பினர்...

தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் உறுப்பினர் விஜயதரணி, தமிழகத்தில் ஒரு நபர் குடும்ப அட்டைகளை வைத்திருப்பவர்கள் குறித்து எங்கள் மாவட்டத்தில் ஒரு ஆய்வு நடத்தினோம். ஒருநபர் குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் தனித்து வாழும் பெண்களாகவும், விதவையர்களாகவும் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவதை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே அந்த கார்டுகளுக்கும் ரேஷன் பொருட்கள் வழங்க உத்தரவிடவேண்டும் என்று வலியுறுத்தினார்.

உரிய நடவடிக்கை...

அதற்கு பதிலளித்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ், ஒரு நபர் குடும்ப அட்டைகள் குறித்து தமிழக அரசு ஒரு ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வில் குடும்பத்தில் இருந்து கொண்டே போலியாக ஒரு நபர் குடும்ப அட்டைகளை பயன்படுத்தி வருவது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 33 ஆயிரம் குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால் ஒரு நபர் ரேஷன்கார்டுகளுக்கு ரேஷன் பொருட்கள் நிறுத்தப்படவில்லை. அவர்களுக்குரிய சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. யாருக்கும் பொருட்கள் வழங்குவது நிறுத்தப்படவில்லை. இதுகுறித்து புகார் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து