உதவாக்கரை பட்ஜெட் என்று விமர்சித்த ஸ்டாலினுக்கு அ.தி.மு.க. கடும் கண்டனம்

திங்கட்கிழமை, 11 பெப்ரவரி 2019      தமிழகம்
Semmalai-2019 02 11

Source: provided

சென்னை : தமிழக பட்ஜெட்டை உதவாக்கரை பட்ஜெட் என்று விமர்சித்த மு.க.ஸ்டாலினுக்கு சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செம்மலை கடும் கண்டனம் தெரிவித்தார்.

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செம்மலை பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

பொங்கல் பரிசாக தமிழக மக்களுக்கு ஆயிரம் ருபாய் வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிக்ஸர் அடித்திருக்கிறார். அடுத்து இப்போது 60 லட்சம் ஏழைத்தொழிலாளர்களுக்கு தலா ரூ.2,000 கொடுத்து மேலும் ஒரு சிக்ஸர் அடித்திருக்கிறார். அடுத்து ஒரு ஹாட்ரிக் அடிக்க போகிறார். அதைத்தொடர்ந்து சிக்ஸராக அடித்து கொண்டே இருப்பார்.

பிளாஸ்டிக் தடை

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்பது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இலட்சிய கனவு, அந்த கனவை நிறைவேற்ற அவர் அரும்பாடுபட்டார். அந்த கனவை நிறைவேற்ற பிரதமரை நேரில் சந்தித்து முதல்வர் எடப்பாடிபழனிசாமி தொடர்ந்து வலியுறுத்தினார். மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமரை அடிக்கல் நாட்ட வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரிய சாதனையை நிறைவேற்றியுள்ளார். பிளாஸ்டிக் தடைச் சட்டம் யாராலும் நினைத்து பார்க்க முடியாத திட்டமாகும். உலக நாடுகளே யோசித்துக் கொண்டிருக்கிற பிளாஸ்டிக் தடை திட்டத்தை ஒரே கையெழுத்தில் நிறைவேற்றியிருக்கிறார்.

நிருபித்துவிட்டார்கள்...

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் யாருமே கேட்காமல் குடிமராமத்து திட்டத்தை கொண்டு வந்தார். வன்னியர் அறக்கட்டளை பொதுச்சொத்து சட்டத்தை நிறைவேற்றி சாதனை படைத்திருக்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சாதாரணமானவர்கள், சாமான்யமானவர்கள் என்று எதிர்க்கட்சிகள் நினைத்திருக்கக்கூடும். அவர்கள் சாதாரணமானவர்கள் சாமான்யர்கள் அல்ல சாதனையாளர்கள் என்பதை ஓ.பி.எஸ்.-ம், இ.பி.எஸ்-ம் நிருபித்துவிட்டார்கள்.

கரைபுரண்டு ஓடும்...

காவிரிஆற்றில் மேகத்தாது அணைக்கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு எதிராக போராடும் முதல்வர், எடப்பாடி பழனிசாமி தமிழகத்திற்கு 200 டி.எம்.சி. கொண்டு வருவதற்காக காவிரி – கோதாவரி இணைப்பு திட்டத்திற்காக மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறார். நிச்சயம் இந்த திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வருவார். சிலப்பதிகாரத்தில் காவிரியை நடந்தாய் வாழி காவிரி என்று சொல்லப்பட்டிருக்கிறது. காவிரி- கோதாவரி திட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் காவிரியில் நீர் அப்போது கரைபுரண்டு ஓடும்.

தேவையில்லாத...

இந்த பட்ஜெட்டை பொறுத்தவரை அழகான பட்ஜெட். இது குறித்து தி.மு.க. உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் கருத்து தெரிவித்தபோது முதல்வரையும், துணை முதல்வரையும் பாராட்டினார். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், உதவாக்கரை பட்ஜெட் என்று கூறியிருக்கிறார். அத்திக்கடவு, அவினாசி திட்டம் உதவாத திட்டமா? ஆழ்கடலில் மீன்பிடிக்க நவீன தொழில்நுட்ப சாதனங்கள் வழங்கும் திட்டம் தேவையில்லாத திட்டமா? கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக 1 லட்சம் வீடுகள் கட்டும் திட்டத்தை எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டாம் என்கிறாரா ? அதில் ஒருவர் காதில் பூ சுற்றும் பட்ஜெட் என்று கூறியிருக்கிறார்.

உகந்ததல்ல...

மற்றவர்கள் காதில் பூச்சுற்றியே பழக்கப்பட்டவர் அவர், ஆனால் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் இப்படி சொல்லலாமா ? எவ்வளவு முயற்சி செய்து தொழிலதிபர்களையெல்லாம் அழைத்து வந்திருக்கும் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை மாயமான் காட்சி என்று தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில் 3லட்சத்து 431 கோடி முதலீட்டை பெற்று 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை வரவேற்கவேண்டும். கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துவது எதிர்க்கட்சித்தலைவருக்கு உகந்ததல்ல. இவ்வாறு அவர் பேசினார்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து