தி.மு.க.வினர் டி.வி., செப்டாப் பாக்ஸ் தருவார்கள் - மின்சாரம் தரமாட்டார்கள் : அ.தி.மு.க. உறுப்பினர் இன்பதுரை கிண்டல்

திங்கட்கிழமை, 11 பெப்ரவரி 2019      தமிழகம்
Inpaturai-2019 02 11

Source: provided

சென்னை : தி.மு.க.வினர் கலர் டிவி கொடுப்பார்கள் செப்டாப்பாக்ஸ் கொடுப்பார்கள் ஆனால் மின்சாரம் தரமாட்டார்கள் என்று சட்டசபையில் அ.தி.மு.க. உறுப்பினர் இன்பதுரை கிண்டலாக தெரிவித்தார்.

தமிழக சட்டசபையில் அ.தி.மு.க. உறுப்பினர் இன்பதுரை பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசினார். அப்போது அவர் பேசுகையில், நான் ரயிலில் சென்று கொண்டிருந்தபோது, ஒருகுடும்பம் பத்திரிகையை படித்து கொண்டிருந்தனர். அதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி பற்றிய செய்தி இடம் பெற்றிருந்தது.

அதில் கருணாநிதி ஆட்சியில் கலர் டி.வி. தந்தார், மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் செப்டாப்பாக்ஸ் இலவசமாக தருவார் என்று கூறியிருந்தார். அதைப்படித்து பார்த்த அந்த குடும்பம் அடித்த கமெண்ட், இரண்டையும் தரும் தி.மு.க. சரி, மின்சாரத்தை யார் கொடுப்பார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் கொடுப்பார் என்று பதிலடி கொடுத்ததாக கூறினார்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து