பிரதமர் வேட்பாளர் பட்டியலில் இருந்து இளவரசி பெயர் நீக்கம் - தாய்லாந்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 12 பெப்ரவரி 2019      உலகம்
Ubolratana Mahidol 2019 02 09

பாங்காக் :  தாய்லாந்தில் பிரதமர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் பட்டியலில் இருந்து இளவரசி உபோல் ரடானாவின் பெயர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தாய்லாந்தில் கடந்த 2014 - ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. பிரயூத் சான்-ஓ-சா பிரதமராக பொறுப்பேற்றார். ஜனநாயக ஆட்சியை கொண்டு வர வலியுறுத்தி மக்கள் போராட்டங்களில் குதித்தனர். இந்நிலையில், பொதுத்தேர்தலை நடத்தும்படி கடந்த மாதம் மன்னர் மகா வஜ்ரலாங்கோன் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பித்தார். அதனைத் தொடர்ந்து மார்ச் 24 - ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த சூழலில் யாரும் எதிர்பாராத விதமாக தாய் ரக்ஷா சார்ட் கட்சி சார்பில் பிரதமர் பதவிக்கு தாய்லாந்து இளவரசி உபோல் ரடானா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. தற்போது தேர்தல் ஆணையம் வெளியிட்ட பிரதமர் வேட்பாளர் பட்டியலில் இளவரசி உபோல் ரடானா பெயர் இடம்பெறவில்லை. அவரது பெயர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து