பனிமூட்டம் காரணமாக டெல்லிக்கு செல்லும் 18 ரயில்கள் தாமதம்

செவ்வாய்க்கிழமை, 12 பெப்ரவரி 2019      இந்தியா
train delayed fog 2019 02 12

புதுடெல்லி : பனிமூட்டம் காரணமாக டெல்லி நோக்கி செல்லும் 18 ரயில்கள் தாமதம் ஆகியுள்ளன.

தலைநகர் டெல்லி உட்பட வட மாநிலங்களில் கடும் பனி மூட்டம் நிலவுகிறது. கடும் குளிரும் நிலவுவதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக டெல்லி சுற்று வட்டாரப்பகுதிகளில் எங்கு பார்த்தாலும் பனிப்படலமாக காட்சியளிக்கிறது. இதனால், குறைந்த அளவு தூரமே கண்ணுக்கு புலப்படுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்ட படியே சென்றதை காண முடிகிறது. பனிமூட்டம் காரணமாக டெல்லிக்கு வர வேண்டிய 18 ரயில்கள் தாமதம் ஆகியுள்ளன. டெல்லியில் காற்றின் தரமும் மோசமாக காணப்பட்டது. கடும் குளிரும் காணப்பட்டதால், சாலையோரம் வசிக்கும் மக்கள் இரவு நேர தங்கும் முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து