முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ. 30 ஆயிரம் கோடியை அம்பானி எடுத்து செல்ல பிரதமர் வழிவகுத்து விட்டார் - ராகுல்காந்தி தாக்கு

செவ்வாய்க்கிழமை, 12 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : இந்திய விமானப்படைக்கு சொந்தமான ரூ. 30 ஆயிரம் கோடி பணத்தை ரிலையன்ஸ் நிறுவனத்தலைவர் அனில் அம்பானி எடுத்து செல்ல பிரதமர் மோடி வழி வகுத்துள்ளார் என்று ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் விமானங்களின் விலை விவரம் குறித்து பிரதமர் அலுவலகம் தனியாக பேரம் பேசியதாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது.

ரபேல் ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு சில நாட்களுக்கு முன்பாக பாதுகாப்பு துறைக்கு தளவாடங்கள் கொள்முதல் செய்யும் விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த ஒப்பந்தத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மத்திய அரசு சார்பில் சலுகைகள் வழங்கப்பட்டதாகவும், ஊழல் தடுப்பு குறித்த விதி, எஸ்க்ரோ சிறப்பு வங்கிகணக்கு மூலம் பணத்தை செலுத்துவது உள்ளிட்ட விதிகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

இந்தியா-பிரான்ஸ் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள ரபேல் ஒப்பந்தத்தில் ஊழலுக்கு எதிரான விதிகள் குறித்து எதுவும் இல்லை. இந்திய விமானப்படைக்கு சொந்தமான ரூ. 30 ஆயிரம் கோடி பணத்தை ரிலையன்ஸ் நிறுவனத்தலைவர் அனில் அம்பானி எடுத்து செல்ல பிரதமர் மோடி வழி வகுத்துள்ளார்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து