மோடியை கண்டித்து மம்தா இன்று டெல்லியில் தர்ணா

செவ்வாய்க்கிழமை, 12 பெப்ரவரி 2019      இந்தியா
mamata banerjee 08-11-2018

கொல்கத்தா : பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து மம்தா பானர்ஜி இன்று  டெல்லியில் தர்ணா போராட்டம் நடத்துகிறார் 

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 2013-ம் ஆண்டு நடந்த சாரதா சிட்பண்ட்ஸ் மோசடி தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ்குமாரை விசாரணைக்கு வருமாறு சி.பி.ஐ. அழைத்தது. சி.பி.ஐ.யின் நடவடிக்கையால் கடும் கோபம் அடைந்த மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் மெட்ரோ ரெயில் நிலையம் எதிரே 3 நாட்கள் தர்ணா போராட்டம் நடத்தினார். 

ஆனால் சுப்ரீம்கோர்ட்டு இதை ஏற்க மறுத்து சி.பி.ஐ. விசாரணைக்கு ராஜீவ்குமார் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.இதைத் தொடர்ந்து மம்தா பானர்ஜி தனது தர்ணா போராட்டத்தை கை விட்டார்.

இந்த நிலையில்  மம்தா பானர்ஜி மீண்டும் தர்ணா போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளார்.இந்த முறை அவர் தனது போராட்ட களத்தை டெல்லிக்கு மாற்றி உள்ளார். டெல்லியில் இன்று அவர் தர்ணா போராட்டத்தை தொடங்குகிறார்.டெல்லியில் 2 நாட்கள் தர்ணா போராட்டம் மேற்கொள்ள மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளை டெல்லியில் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து