ஸ்டாலின் போடும் பால் நோ பால் ஆகிவிடும்: சட்டசபையில் அமைச்சர் பேச்சால் சிரிப்பலை

செவ்வாய்க்கிழமை, 12 பெப்ரவரி 2019      தமிழகம்
jayakumar 23-11-2018

சென்னை : ஸ்டாலின் போடும் பால் நோ பால் ஆகிவிடும் என்று சட்டசபையில் அமைச்சர் ஜெயக்குமார் பேசியது சிரிப்பலையை ஏற்படுத்தியது.

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், அ.தி.மு.க உறுப்பினர் செம்மலை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடுத்தடுத்து சிக்ஸர் அடிக்கிறார் என்று குறிப்பிட்டார். இறுதியில் எங்கள் தலைவர் ஸ்டாலின் போடும் பாலில் நீங்கள் கிளின்போல்டு ஆகி விடுவீர்கள் என்று தெரிவித்தார்.

இதற்கு உடனடியாக பதில் அளித்த அமைச்சர் ஜெயகுமார், அது நோ பாலாக ஆகிவிடும் என்றார். அமைச்சரின் பேச்சை கேட்டதும் சட்டசபையில் சிரிப்பலை ஏற்பட்டது. மேலும், தொடர்ந்து பேசிய அமைச்சர் தங்கமணி,  பால் இருந்தால்தான் கிரவுண்டுக்குள் வர முடியும். நீங்கள் கிரவுண்டுக்குள்ளேயே வர முடியாது என்றார். இதனால் மேலும், அவையில் சிரிப்பலை எழுந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து