ஆஸ்திரேலிய அணி இந்திய பயணம்: ரோகித் - தவானுக்கு ஓய்வு ? ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு

செவ்வாய்க்கிழமை, 12 பெப்ரவரி 2019      விளையாட்டு
Rahul - Rahane 2019 02 12

புதுடெல்லி : aவேலைப்பளுவை மனதில் கொண்டு ஆஸ்திரேலியா தொடரின்போது ரோகித் சர்மா மற்றும் தவானுக்கு ஓய்வு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுற்றுப்பயணம்...

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு 20 ஓவர் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. வருகிற 24-ம் தேதி முதல் 20 ஓவர் போட்டி விசாகப்பட்டினத்தில் நடக்கிறது. 2-வது ஆட்டம் பெங்களூரில் 27-ம் தேதி நடைபெறுகிறது. ஒருநாள் போட்டிகள் மார்ச் 2, 5, 8, 10 மற்றும் 13-ம் தேதி ஆகிய தேதிகளில் முறையே ஐதராபாத், நாக்பூர், ராஞ்சி, மொகாலி, டெல்லியில் நடக்கிறது.

ஓய்வு வழங்க...

இந்த போட்டிக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படுகிறது. உலகக்கோப்பை போட்டிக்கு முன்பு நடைபெறும் கடைசி ஒருநாள் தொடர் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. தொடர்ந்து விளையாடி வருவதால் ரோகித் சர்மா, தவான் ஆகியோருக்கு சில ஆட்டங்களில் ஓய்வு கொடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.அவர்களுக்கு பதிலாக தொடக்க வீரர் வரிசையில் ரகானே, கே.எல்.ராகுல் ஆகியோர் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் கோலி...

நியூசிலாந்து தொடரில் பாதியில் ஓய்வு கொடுக்கப்பட்ட கேப்டன் விராட்கோலி அணிக்கு மீண்டும் திரும்புகிறார். இதேபோல வேகப்பந்து வீரர் பும்ராவும் அணிக்கு மீண்டும் திரும்புவார். அவர் காயம் காரணமாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தொடரில் விளையாடவில்லை. வேகப்பந்து வீரர்களும், சுழந்பந்து வீரர்களும் சுழற்சி முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். மிடில் ஆர்டர் வரிசையிலும் அணி மாற்றம் இருக்கலாம். இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து பயணத்தில் சிறப்பாக விளையாடி தொடரை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டால் ரகானே, லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கி விளையாட வாய்ப்புள்ளது.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து