முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே.இ.தீவுக்கு எதிரான டெஸ்ட்: ஜோ ரூட் சதத்தால் வலுவான நிலையில் இங்கிலாந்து அணி

செவ்வாய்க்கிழமை, 12 பெப்ரவரி 2019      விளையாட்டு
Image Unavailable

செயின்ட் லூசியா : வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில், இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட், அபார சதமடித்தார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, 2-0 என வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றிவிட்டது. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி செயின்ட் லூசியாவில் நடந்து வருகிறது.

பந்துவீச்சை தேர்வு...

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி, நிதானமாக ஆடியது. முதல் இன்னிங்சில் அந்த அணி 277 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகப்பட்சமாக பட்லர் 67 ரன்னும் பென் ஸ்டோக்ஸ் 79 ரன்னும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கெமர் ரோச் 4 விக்கெட்டுகளும் கேப்ரியல், ஜோசப், கீமோ பால் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

மார்க்வுட் அசத்தல்...

பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 47.2 ஓவர்களில் 154 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக ஜான் கேம்பல் மட்டும் 41 ரன் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் மார்க்வுட் 5 விக்கெட்டுகளை அள்ளினார். மொயின் அலி 4 விக்கெட்டும் பிராட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

448 ரன் முன்னிலை...

இதையடுத்து இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. நேற்று முன்தினம் ஆட்ட நேர முடிவில் அந்த அணி, 4 விக்கெட் இழப்புக்கு 325 ரன் எடுத்துள்ளது. பட்லர் 56 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் 111 ரன்களுடனும் பென் ஸ்டோ க்ஸ் 29 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 448 ரன் முன்னிலை பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து