‘பேபிசிட்டிங்’ விளம்பரம் குறித்து ஆஸி. வீரர் மேத்யூ ஹெய்டன் பதில்

செவ்வாய்க்கிழமை, 12 பெப்ரவரி 2019      விளையாட்டு
babysitting advt shewag 2019 02 12

ஆஸ்திரேலியா இரண்டு டி20, ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாட இந்தியா வருகிறது. இதுதொடர்பாக இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் சேவாக் ‘பேபிசிட்டிங்’ விளம்பர படத்தில் நடித்தார். அதில் நடித்த சேவாக் ‘‘நாங்கள் ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது, அவர்கள் எங்களிடம் பேபிசிட்டராக இருக்க முடியுமா?’’ என்று கேட்டார்கள். நீங்கள் எங்கள் வீட்டுக்கு வாங்க.. நீங்கள் சொல்வதை செய்கிறோம்’’ என்று உறுதியளிப்பதுபோல் கூறுகிறார்.

இந்த விளம்பரத்தை குறிப்பிட்டு மேத்யூ ஹெய்டன் பதிவிட்டுள்ள ட்விட்டரில் ‘‘எச்சரிக்கிறேன்... ஆஸ்திரேலியா அணியை எளிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள் சேவாக், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்தியா. உலகக்கோப்பை போட்டியின்போது யார் பேபி சிட்டர்-ஆக இருந்தார்கள் என்பதை கொஞ்சம் நினைத்து பாருங்கள்’’ என்று பதில் கொடுத்துள்ளார்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து