முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 மகளிர் கிரிக்கெட் தரவரிசை: மந்தனா, ஜெமிமா முன்னேற்றம்

புதன்கிழமை, 13 பெப்ரவரி 2019      விளையாட்டு
Image Unavailable

துபாய் : டி-20 போட்டிக்கான தரவரிசைப்பட்டியலில் மந்தனா, ஜெமிமா நான்கு இடங்கள் முன்னேறினர்.

சர்வதேச டுவென்டி அரங்கில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) வெளியிட்டுள்ளது. பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் மந்தனா நான்கு இடம் முன்னேறி ஆறாவது இடம் பிடித்தார். நியூசிலாந்துக்கு எதிரான சமீபத்திய டுவென்டி-20 தொடரை இந்திய அணி 0-3 என இழந்தது. ஆனால், இத்தொடரில் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் மந்தனா (3 போட்டி, 180 ரன்) முதலிடம் பிடித்ததால் முன்னேற்றத்தை சந்தித்துள்ளார். இதே தொடரில் 132 ரன் விளாசிய சக வீராங்கனை ஜெமிமா நான்கு இடம் முன்னேறி இரண்டாவது இடத்தை எட்டினார். இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் 7வது இடத்தில் நீடிக்கிறார்.

பவுலர்கள் பட்டியலில் இந்திய சுழல் வீராங்கனை ராதா யாதவ் 18 இடம் முன்னேறி 10வது இடத்தை அடைந்தார். சக நட்சத்திரம் தீப்தி சர்மா 5 இடம் முன்னேறி 14வது இடத்தை பிடித்தார். இந்தியாவின் பூனம் யாதவ் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார். ஆல் ரவுண்டர் தரவரிசையில் டாப் 10 இடத்தில் இந்திய வீராங்கனைகள் யாரும் இல்லை. சிறந்த இடத்தை ஹர்மன்பிரீத் (13வது இடம்) பிடித்துள்ளார். சக வீராங்கனை அனுஜா 19வது இடத்தில் உள்ளார். அணிகளுக்கான பட்டியலில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் முறையே 4,5வது இடம் வகிக்கின்றன. ஆஸ்திரேலிய அணி நம்பர் 1 இடத்தில் நீடிக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து