முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.69 கோடி மதிப்பிலான 275 நவீன பேருந்துகளின் சேவையை முதல்வர் எடப்பாடி துவக்கி வைத்தார்

வியாழக்கிழமை, 14 பெப்ரவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழ்நாடு போக்குவரத்து கழகங்களின் சார்பில் சுமார் 69 கோடி ரூபாய் மதிப்பிலான 275 அதிநவீன பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார்.

மின்விசிறி உள்ளிட்ட...

சென்னை மாநகருக்கு 17 சிவப்பு பேருந்துகள், சேலத்திற்கு 30, விழுப்புரத்திற்கு 66, கும்பகோணத்திற்கு 23, கோவைக்கு 14 என மொத்தம் 275 புதிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளின் இருபுறமும் அவசரகால வழி அமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் இறங்கும் இடத்தை அறிவித்திடும் ஒலி பெருக்கி வசதி, ஓட்டுநருக்கு மின்விசிறியும் இதில் வைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் தாங்கள் கொண்டு வரும் ஊன்றுகோலை பாதுகாப்பாக வைத்திட வசதி, அவர்கள் இறங்கும் இடத்தைத் தெரிவித்திட ஒலி அழைப்பானும் அமைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் துவக்கி...

68 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 275 புதிய பேருந்துகளை துவக்கி வைக்கும் அடையாளமாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று பொது மக்களின் பயன்பாட்டிற்காக 7 பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து