முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்த 5 நாட்கள் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை மறுத்தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு

வியாழக்கிழமை, 14 பெப்ரவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : ஐந்து நாட்களாக நடைபெற்ற தமிழக சட்டசபை நேற்றுடன் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து மறுத்தேதி குறிப்பிடப்படாமல் சட்டசபையை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

பட்ஜெட் தாக்கல்....

தமிழக சட்டசபை கடந்த 8ம் தேதி கூடியது. இந்த கூட்டத்தில் துணைமுதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்ச்செல்வம் 8-வது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து கடந்த 11ம் தேதி பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. கடந்த 11 மற்றும் 12 ம்தேதிகளில் திமுக தரப்பில் பிடிஆர் பழனிவேல்ராஜன் தியாகராஜன், செங்குட்டுவன், அதிமுக தரப்பில் செம்மலை, இன்பதுரை, கலசப்பாக்கம் பன்னீர்செல்வம், சோழவந்தான் மாணிக்கம் காங்கிரஸ் தர்ப்பில் விஜயதரணி, காளிமுத்து, மனிதஜனநாயக கழகம் சார்பில் தமிமுன் அன்சாரி, கொங்கு இளைஞர் பேரவை உறுப்பினர் தனியரசு, முக்குலத்தோர் புலிப்படை உறுப்பினர் கருணாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

9 சட்டமுன்வடிவுகள்...

கடந்த 13ம் தேதி எதிர்க்கட்சித்துணைத்தலைவர் துரைமுருகன், காங்கிரஸ் தலைவர் கரி ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து உறுப்பினர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் துணைமுதல்வர் ஓ,பன்னீர்செல்வம் பதிலளித்தார். சுமார் பகல் 12.45 மணிக்கு அவரது பதிலுரையை தொடங்கி இரண்டு மணிக்கு முடித்தார். நாள்தோறும் கேள்வி பதில்கள் நேரமில்லா நேரத்தில் பல்வேறு பிரச்னைகளை உறுப்பினர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பனனீர்செல்வம் தனது பதில் உரையை முடித்ததும் நேறறு மாலை பிளாஸ்டிக் பயன்படுத்துவோருக்கு அபராதம்,  நாகர் கோவில், ஓசூர் மாநகராட்சிகள் உருவாக்கம், தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட 9 சட்டமுன்வடிவுகள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து சட்டசபையை தேதி குறிப்பிடப்படாமல் ஓத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து