முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லை சுவர் விவகாரம்: அமெரிக்காவில் அவசர நிலையை பிரகடனப்படுத்த ட்ரம்ப் முடிவு

வெள்ளிக்கிழமை, 15 பெப்ரவரி 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், அமெரிக்க அதிபர் டிரம்ப், மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்ப வேண்டிய நிதியை பெறுவதற்காக அவசர நிலை பிரகடனத்தில் கையெழுத்திடவுள்ளார்.

இது குறித்து வெள்ளை மாளிகை பத்திரிகை செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டரஸ் கூறும் போது, அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர் முன்பு கூறியது போல எல்லைச் சுவர் எழுப்புவதற்கு தேவைப்படுவதற்கான மசோதாவில் கையெழுத்திடவுள்ளார். இந்த சுவரின் மூலம் நமது நாடு பாதுகாக்கப்படும் என்று நமது அதிபர் மீண்டு உறுதியளித்துள்ளார் என்றார்.

தெற்கு மெக்சிகோ எல்லை வழியாக, அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக அகதிகள் வருகின்றனர். இதைத் தடுக்க சுவர் எழுப்ப வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து