முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நில ஆதாரங்களை திறம்பட பயன்படுத்த விரைவில் 'நில பயன்பாட்டுக்கொள்கை' துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 15 பெப்ரவரி 2019      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : நில ஆதாரங்களை முறையாகவும், திறம்படவும் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காகவும் மாநில நில பயன்பாட்டு கொள்கை வடிவமைக்கப்பட்டு வருகிறது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

கிரடாய் வீட்டுவசதி அமைப்பு ஏற்பாடு செய்த ஃபேர் புரோ 2019 வீட்டுவசதி கண்காட்சியின் தொடக்க விழா சென்னை நந்தம்பாக்கம் தொழில் மையத்தில் நேற்று தொடங்கியது. இந்த விழாவை துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்து பேசினார், அப்போது அவர் பேசியதாவது:

வங்கியின் கடனுதவி...

சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், ஆற்றங்கரையோரம்வசித்து வரும் ஏழைக் குடும்பங்களுக்கு, மிகச் சிறந்த மறு குடியமர்த்தும் நடைமுறைகளைப்பின்பற்றி, உலக வங்கி உதவியுடன், 4,647.50 கோடி ரூபாய் செலவில், 38,000குடியிருப்புகளை அமைப்பதற்காக ‘நகர்ப்புற ஏழை மக்களுக்கான தமிழ்நாடு வீட்டுவசதிமற்றும் வாழ்விட மேம்பாட்டுத் திட்டம்’ செயல்படுத்தப்படும். சென்னை தவிர்த்த, இதர நகர்ப்புறப் பகுதிகளில் வீட்டுவசதியினை வழங்குவதற்கும், நகர்ப்புற ஏழைகளுக்குப் பயனளிக்கக்கூடிய வகையில் தொழிலக மற்றும் வாடகை வீட்டுவசதியினை போதுமான அளவில் உருவாக்குவதற்கும், நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வீட்டுவசதித் திட்டத்தை 5,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்துவதற்கும், ஆசிய வளர்ச்சி வங்கியின் கடனுதவி கோரப்பட்டுள்ளது.

நில பயன்பாட்டு கொள்கை..

வீட்டுவசதிவாரியம், அரசு ஊழியர்களின் குடியிருப்புத் தேவைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.மேலும், பெருமளவிலான துணைக்கோள் நகரங்களின் வளர்ச்சியிலும் தமிழ்நாடுவீட்டுவசதி வாரியம் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.மிகக் குறைவாக உள்ள நில ஆதாரங்களைத் திறம்பட பயன்படுத்துவது மிகவும்அவசியமாகும். நகர் மற்றும் ஊரகப் பகுதிகளில், திட்டமிடல் பணியை நகர் மற்றும்ஊரமைப்பு இயக்ககம் திறம்பட மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. எனவே, நிலஆதாரங்களை முறையாகவும், திறம்படவும் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காகவும்மாநில நில பயன்பாட்டு கொள்கை வடிவமைக்கப்பட்டு வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

மண்டலங்களுக்கான...

அடுத்து, மாநிலம் முழுவதையும் திட்டமிட்ட வளர்ச்சியின் கீழ்கொண்டுவருவதற்காக, மாநிலம் முழுமைக்குமான ஒரு முன்னோடித் திட்டம் மற்றும் மண்டலத் திட்டங்களை இரண்டு ஆண்டுகளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் நகர்ஊரமைப்பு இயக்ககம் தயார் செய்யும் என்பதையும் இந்த நல்ல நேரத்தில் குறிப்பிடவிரும்புகிறேன். இந்த குறிக்கோளுக்காக மாநிலம் முழுவதும் 9 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, இதன் முதற்கட்டமாக கோயம்புத்தூர் மற்றும் மதுரை மண்டலங்களுக்கான திட்டங்கள் தீட்டப்படும். இதற்கான நிர்வாக ஒப்புதல் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து