முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட ரெயில்வே ஊழியருக்கு போலீஸ் காவல்

சனிக்கிழமை, 16 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

புனே : தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட ரெயில்வே ஊழியர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தில் நடந்த தாக்குதலில் துணை ராணுவ படையினர் 45 - பேர் பலியாகி உள்ளனர்.

இந்த தாக்குதலை பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிற மசூத் அசார் தலைமையிலான ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலுக்கு அவர்கள் பொறுப்பேற்றனர்.

இந்நிலையில், தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட நபர் நேற்று கைது செய்யப்பட்டார்.அவரது பெயர் உபேந்திரா பகதூர் சிங் (39). இவர் ரெயில்வே துறையில் இளநிலை டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வருகிறார்.

இதுபற்றி மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் கூறும்பொழுது, நேற்று காலை லோனாவாலா பகுதியில் சிவாஜி சவுக் என்ற இடத்தில் உள்ளூர் குடியிருப்புவாசிகள் சிலர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வந்தனர்.அந்த இடத்திற்கு வந்த சிங் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷங்களை எழுப்பினார். இதனால் அங்கிருந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து அவரை அடிக்க முற்பட்டனர்.ஆனால் அங்கு குவிக்கப்பட்டு இருந்த காவல் துறை அதிகாரிகள் அவரை உடனடியாக கைது செய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு நாளை 18 - ம் தேதி வரை போலீஸ் காவல் விதித்து உத்தரவிடப்பட்டு உள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து