முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாக்குதலில் வீர மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.11 லட்சம் நிதியுதவி: திருமண விருந்தை நிறுத்தி வழங்கிய வைர வியாபாரி

சனிக்கிழமை, 16 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

சூரத் : தீவிரவாதத் தாக்குதலால் வீரர்கள் மரணமடைந்த செய்தியைக் கேட்ட சூரத் வைர வியாபாரி, தனது மகளின் திருமண விருந்தை நிறுத்தி ரூ.11 லட்சத்தை உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு அளித்துள்ளார். இந்தச் செய்தி அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.

சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரி தெவாஷி மனேக். இவர் தனது மகள் எமியின் திருமணம் நேற்று  முன்தினம் விமரிசையாக நடைபெற்றது. திருமணத்துக்கு வந்த உறவினர்களுக்கு ஆடம்பரமாக விருந்து அளிக்க மனேக் முடிவு செய்திருந்தார். ஆனால் வீரர்கள் மரணமடைந்த செய்தியைக் கேட்டவர் விருந்தை ரத்து செய்தார்.

அதற்காக வைத்திருந்த ரூ.11 லட்சம் பணத்தை உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு அளிக்க முடிவு செய்தார். அதேபோல தாக்குதல் நடைபெற்ற பகுதியில் சேவையாற்றும் நிறுவனங்களுக்கு 5 லட்ச ரூபாயை வழங்கினார்.

ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு வியாழக்கிழமை மாலை துணை ராணுவப் படையினர் 2,500 பேர் 90-க்கும் மேற்பட்ட பேருந்தில் சென்றனர். புல்வாமா மாவட்டம் அவந்திபோரா நெடுஞ்சாலையில் பேருந்து வந்த போது 5-வது வரிசையில் சென்றுகொண்டிருந்த பேருந்து மீது வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை மோதச் செய்து ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினார். இதில் 45 சி.ஆர்.பி.எப் வீரர்கள் கொல்லப்பட்டனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்நிலையில், வைர வியாபாரி ஒருவர் தனது மகளின் திருமண விருந்தை நிறுத்தி ரூ.11 லட்சத்தை உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு அளித்துள்ளது அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.

அதேபோல உத்தராகண்ட் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அனைவரும் சேர்ந்து தங்களின் ஒரு நாள் ஊதியத்தை உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு அளிக்க முடிவு செய்து, அந்தப் பணத்தை டெல்லியில் அமைந்துள்ள சி.ஆர்.பி.எப்.பின் தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து