முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் உயிரிழந்த வீரர்களுக்கு இரங்கல்: விருது விழாவை தள்ளி வைத்த கோலி

சனிக்கிழமை, 16 பெப்ரவரி 2019      விளையாட்டு
Image Unavailable

மும்பை : புல்வாமா பயங்கர தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நேற்று நடைபெற இருந்த விளையாட்டு விருது விழாவை ஒத்திவைத்துள்ளார்.

நிகழ்ச்சி ரத்து...

விராட் கோலி அறக்கட்டளை மற்றும் ஆர்.பி, சஞ்சீவ் கோயங்கா குழுமத்தின் சார்பில் நேற்று விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா நடைபெற இருந்தது. இந்நிலையில், புல்வாமா தாக்குதலில் 40க்கும் அதிகமான சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்ததையடுத்து அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் விழா ரத்து செய்யப்படுவதாக கோலி தெரிவித்துள்ளார். மேலும், நாளை இந்த விருது வழங்கும் விழா நடைபெறும் என்றும் தம்முடைய ட்விட்டரில் அவர் கூறியுள்ளார்.

கோலி கண்டனம்...

முன்னதாக, பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற உடனே விராட் கோலியும் உடனடியாக தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்திருந்தார். விராட் தன்னுடைய ட்விட்டரில், “புல்வாமா தாக்குதல் சம்பவம் கேள்விபட்டு நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். உயிரிழந்த வீரர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து