முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்: உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கு உதவி கரம் நீட்டும் வீரேந்திர சேவாக்

சனிக்கிழமை, 16 பெப்ரவரி 2019      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குழந்தைகளின் கல்விக்கு உதவ இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் முன்வந்துள்ளார்.

40 பேர் வீர மரணம்

ஜம்மு-காஷ்மீரில் கடந்த 3 நாட்களுக்கு பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் வீர மரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெயிஷ்-இ-முகமது அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த கொடூர தாக்குதலுக்கு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன. உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் இழப்பீட்டு தொகை வழங்கி வருகின்றன.

கல்விச் செலவை...

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், வீரமரணம் அடைந்த 40 வீரர்களின் குழந்தைகளின் முழு கல்விச் செலவையும் தானே ஏற்பதாகவும் அவர்களை தான் நடத்தி வரும் சர்வதேச சேவாக் பள்ளியில் படிக்க வைப்பதாகவும் ட்விட்டரில் அறிவித்துள்ளார். மேலும் வீரமரணம் அடைந்த இந்த வீரர்களுக்கு நாம் எது செய்தாலும் அது போதுமானதாக இருக்காது என குறிப்பிட்டு வீர மரணம் அடைந்த வீரர்களின் புகைப்படங்கள், அவர்களின் பெயர் பட்டியலையும் சேவாக் வெளியிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து