முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் எல்லைக்கு அருகே பொக்ரானில் மிகப் பெரும் ஒத்திகையில் ஈடுபட்ட இந்திய விமானப்படை பகலிரவு பாராமல் 140 போர் விமானங்கள் - ஹெலிகாப்டர்கள் குண்டுகளை வீசி பயிற்சி

ஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

பொக்ரான் : பாகிஸ்தான் எல்லைக்கு அருகே, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பொக்ரானில் இந்திய விமானப்படை மிகப்பெரிய ஒத்திகையில் ஈடுபட்டது. பகலிரவு பாராமல் ஏராளமான விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஏவுகணைகள், குண்டுகளை வீசி பயிற்சியில் ஈடுபட்டன. புல்வாமாவில் சி.ஆர்.பி.எப்.வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என்று ஒத்திகை குறித்து விமானப்படை தளபதி பி.எஸ். தனோவா தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினார். இதில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில், பாகிஸ்தானின் எல்லைப் பகுதிக்கு அருகே அமைந்துள்ள பொக்ரான் பகுதியில் வாயு சக்தி என்ற பெயரில் இந்திய விமானப்படை  மிகப் பெரிய ஒத்திகையை நடத்தியது.

இந்த ஒத்திகைக்கு தரைப்படைத் தளபதி பிபின் ராவத், விமானப்படைத் தளபதி பி.எஸ். தனோவா, சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இரவுபகலாக நடத்தப்பட்ட ஒத்திகை விமானப்படை தளபதி பி.எஸ். தனோவா கூறுகையில், நம்முடைய அரசு உறுதியளித்துள்ளபடி, எந்தநேரத்திலும் தகுந்த பதிலடி கொடுப்பதற்காக இந்திய விமானப்படை தயாராகி வருகிறது. அதற்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளோம். நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயத்திலும், இறையாண்மையை காப்பதிலும் இந்திய விமானப்படை தகுதியுடன் இருக்கிறது என்பதற்கு உறுதியளிக்கிறேன். ஏறக்குறைய 140 விமானங்கள், ஹெலிகாப்டர்கள் இந்தப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. ஏவுகணைகள், நீண்டதொலைவு சென்று தாக்கும் ஏவுகணைகள் ஆகியவற்றை வீசியும் பயிற்சியில்ஈடுபட்டு வருகிறோம் எனத் தெரிவித்தார். வாஜ்பாய் பிரதமராக இருந்த போது இதே பொக்ரானில் தான் அணுகுண்டு சோதனையை இந்தியா நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து