முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூட்டணி முடிவை அ.தி.மு.க. தலைமை அறிவிக்கும்- அமைச்சர் ஜெயக்குமார் - போட்டியில்லை என்று அறிவித்த ரஜினிக்கு வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 17 பெப்ரவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தேர்தல் கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்பது அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இருந்து தான் வரும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். மேலும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்று அறிவித்த ரஜினிக்கு அமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.

தென் சென்னை எம்.பி. ஜெயவர்தன் ஏற்பாட்டில் நேற்று தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

ஒவ்வொருவருக்கும் ஒரு கொள்கை இருக்கும். அ.தி.மு.க. கொள்கை என்பது தேர்தலில் மக்களை சந்தித்து அந்த தேர்தல் மூலம் மகத்தான வெற்றி பெற்று மக்களுக்கு நல்ல பல திட்டங்களை செய்வது தான். அதை எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து இப்போது வரை செய்து வருகிறோம். இது எங்களது கொள்கை.

எனவே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கொள்கை உண்டு. ரஜினி அவரது கொள்கையை வெளிப்படுத்தி உள்ளார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

கேள்வி:- பா.ஜனதாவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை எந்த அளவில் உள்ளது?

பதில்:- இது தேர்தல் காலம். இந்த சமயத்தில் பேச்சுவார்த்தைகள் குழு, தேர்தல் அறிக்கை குழு, கூட்டணி குறித்து பேசும் குழு, தேர்தல் அறிக்கை குழு என அமைக்கப்பட்டுள்ளது.

எங்கள் கட்சியில் அவரவர் பணியை செய்து கொண்டிருக்கிறார்கள். எனவே கூட்டணி என்று வரும் போது நிச்சயம் வெளியில் தெரியவரும். தலைவர்கள் சந்திப்பை வைத்து கூட்டணியை உறுதிப்படுத்த முடியாது.

கட்சித் தலைமையால் வெளியிடப்படுகிற அறிவிப்பு தான் உறுதியான அறிவிப்பாக எடுத்து கொள்ள முடியும். அது நல்ல அறிவிப்பாக நிச்சயமாக இருக்கும். தமிழ்நாட்டில் அ.தி.மு.க. தலைமையில் தான் மெகா கூட்டணி நிச்சயம் அமையும்.

எனவே தேர்தலில் அ.தி. மு.க. தலைமையிலான கூட்டணிக்கும் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கும் தான் போட்டியே தவிர வேறு எவரும் போட்டி கிடையாது.  
கே:- பா.ஜனதாவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை 12 மணி வரை நடந்துள்ளதே?
ப:- எங்கள் தரப்பில் பேசி இருக்கலாம். ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்பது அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இருந்து தான் வரும். அதுவரை பொறுத்திருங்கள்.
கே:- தமிழகத்தில் பா. ஜனதாவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?
ப:- எங்களைப் பற்றி கேளுங்கள் பதில் சொல்கிறேன். இந்த கேள்விக்கு நீங்கள் பா.ஜனதாவினரிடம் தான் பதில் கேட்க வேண்டும். அ.தி.மு.க.வை பொறுத்தவரை மக்களை எதிர் கொண்டு மகத்தான வெற்றி பெறும்.
கே:- தேர்தலில் எதை மையப்படுத்தி பிரசாரத்தில் ஈடுபட போகிறீர்கள்?
ப:- எவ்வளவோ பிரச்சனைகள் உள்ளது. மாநிலத்துக்கு உள்ள அனைத்து அதிகாரங்களும் கிடைக்க வேண்டும். இதற்காக முழு அளவுக்கு எங்கள் குரல் எதிரொலிக்கும். இவ்வாறு அவர் கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து