முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 நாள் பயணமாக சவுதி இளவரசர் சல்மான் இன்று இந்தியா வருகை

திங்கட்கிழமை, 18 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் 2 நாள் பயணமாக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.   

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், முதலாவது அரசு முறை பயணமாக பாகிஸ்தான், இந்தியா, மலேசியா, இந்தோனேஷியா ஆகிய 4 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் இன்று  (செவ்வாய்க்கிழமை) முதல் 2 நாட்களுக்கு இந்தியாவில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இதற்காக டெல்லி வரும் அவர் பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது, பயங்கரவாத எதிர்ப்பு, எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடக்கிறது.

பட்டத்து இளவரசரின் இந்திய வருகையால், இந்தியா-சவுதி இடையிலான உறவுகள் மேலும் வலுவடையும், வரலாற்று சிறப்பு மிக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளதாக இந்தியாவுக்கான சவுதி தூதர் சவுத் முகமது அல் சதி கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து