முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் தாக்குதலில் இந்திய வீரர்கள் மரணம்: மொகாலி மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த பாக். கிரிக்கெட் வீரர்கள் புகைப்படங்கள் நீக்கம்

திங்கட்கிழமை, 18 பெப்ரவரி 2019      விளையாட்டு
Image Unavailable

மும்பை : காஷ்மீர் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மொகாலி மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தொடர்பான புகைப்படங்களை பஞ்சாப் கிரிக்கெட் வாரியம் நீக்கியுள்ளது.

40 வீரர்கள்...

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ்-இ-முஹம்மத் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி புல்வாமாவில் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையைச்  சேர்ந்த 40 வீரர்கள் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதல் இந்திய அளவில் சோகத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இதனையடுத்து மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி பொருட்களுக்கு 200 சதவிதமாக சுங்க வரியை உயர்த்தினார். 40 சிஆர்பிஎப் வீரர்களின் மறைவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தங்கள் எதிர்ப்பை பாகிஸ்தான் பாடகர்கள் இந்திய இசையில் பாட தடை விதிக்க மகாராஷ்டிரா நவநிர்மான் சேவா அமைப்பினர் வலியுறுத்தினர்.

பாக். வீரர்கள்...

காஷ்மீர் தாக்குதலால்  இந்தியாவைச் சேர்ந்த பலரும் பாகிஸ்தான் தொடர்பான விஷயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேபோல் பஞ்சாப் கிரிக்கெட் வாரியம் மொகாலி மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தொடர்பான புகைப்படங்களை நீக்கியுள்ளது. இம்ரான் கான், வாசிம் அக்ரம், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் புகைப்படங்கள் பல புகைப்படங்களை நீக்கியுள்ளது.

கொடுக்கவில்லை...

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் சிங்லா, புல்வாமா தாக்குதலால் இந்தியாவே அதிர்ச்சியில் உள்ளது. பாகிஸ்தான் வீரர்களின் புகைப்படத்தை நீக்கவேண்டுமென்பது நாங்கள் எடுத்த முடிவு. வேறு யாரும் எங்களுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, இந்திய கிரிக்கெட் சங்க தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய பாகிஸ்தான் பிரதமரான இம்ரான்கான் புகைப்படம் காகிதம் ஒட்டி மறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து