முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்ஆப்பிரிக்கா எதிரான ஒருநாள் தொடர்: இலங்கை கிரிக்கெட் அணி அறிவிப்பு

திங்கட்கிழமை, 18 பெப்ரவரி 2019      விளையாட்டு
Image Unavailable

கொழும்பு : ஐந்து போட்டிகள் கொண்ட தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான மலிங்கா தலைமையிலான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

5 போட்டிகள்...

இலங்கை அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது இரு அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. டர்பனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இலங்கை 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2-வது டெஸ்ட் போர்ட் எலிசபெத்தில் வருகிற 21-ம் தேதி நடக்கிறது. அதன்பின் மார்ச் 3-ம் தேதி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்கிறது.

இலங்கை வீரர்கள்...

இதற்கான மலிங்கா தலைமையிலான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தென்ஆப்பிரிக்கான தொடருக்கான இலங்கை அணியில் இடம் பிடித்துள்ள வீரர்களின்

விவரம்:-

1. மலிங்கா 2. பெர்னாண்டோ 3. தரங்கா 4. டிக்வெல்லா 5. குசால் பெரேரா 6. குசால் மெண்டிஸ் 7. டி சில்வா 8. திசாரா பெரேரா 9. தனஞ்செயா 10. ஏ. பெரேரா 11. ஓ பெர்னாண்டோ 12. கே. மெண்டிஸ் 13. உடானா 14. வி. பெர்னாண்டோ 15. கே. ரஜிதா 16. சண்டகன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து