முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

படகுகள் மூலம் சட்ட விரோதமாக குடியேறுபவர்களுக்கு ஆஸி.பிரதமர் எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2019      உலகம்
Image Unavailable

கேன்பரா : சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்குள் வர நினைப்பவர்கள் நாடு கடத்தப் படுவார்கள் என்று அந்நாட்டு பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மனுஸ்தீவு மற்றும் நவுருவில் உள்ள ஆஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களில் சிறை வைக்கப்பட்டிருக்கும் அகதிகளின் மருத்துவ உதவிக்காக ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்வது தொடர்பான மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. மசோதாவுக்கு ஆளும் மாரிசன் அரசு எதிர்ப்பு தெரிவித்த போதும் எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் மசோதா நிறைவேறியது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக வர முயற்சிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக வீடியோ ஒன்றை ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

சட்ட விரோத படகு பயணத்தை மேற்கொள்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் ஒருபோதும் ஆஸ்திரேலியாவில் குடியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆஸ்திரேலிய எல்லைப்பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை தடுத்து பயணத்தை தொடங்கிய நாட்டுக்கோ அல்லது சொந்த நாட்டுக்கோ நாடு கடத்துவார்கள்.ஆபத்தான படகு பயணத்தை மேற்கொள்ள நினைப்பவர்கள் ஒரு போதும் வெற்றிபெற முடியாது என்று பிரதமர் ஸ்காட் மாரிசன் கூறியுள்ளார். 15 நாடுகளின் மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள இவ்வீடியோ ரகசியமாக பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.இது போன்ற வீடியோவை ஆஸ்திரேலிய பிரதமர் வெளியிடுவது இதுவே முதல்முறை என்று கூறப்படுகின்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து