முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உங்கள் அணியில் யார் பிரதமர் வேட்பாளர்? ராகுலுக்கு அமித்ஷா கேள்வி

செவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

ஜெய்பூர் : பிரதமர் பதவிக்கு உங்கள் அணியில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பா.ஜ.கக தேசிய தலைவர் அமித்ஷா கேள்வி எழுப்பி உள்ளார்.

பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா, ஜெய்ப்பூரில் நடந்த தொண்டர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி மீண்டும் அந்த பதவிக்கு போட்டியிடுகிறார். ஆனால் எதிர்கட்சியில் பிரதமர் வேட்பாளர் யார் என்று தெரியவில்லை. பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் ஒன்று சேர்ந்து உள்ளனர். ஆனால் பிரதமர் வேட்பாளருக்கு ஒருவரை அவர்களால் முன்நிறுத்த முடியவில்லை. நான் ராகுலிடம் கேட்கிறேன். எங்கள் அணியில் நரேந்திர மோடி இருக்கிறார். உங்கள் அணியில் யார் தலைவர்? என்பதை சொல்லுங்கள். மக்களுக்கு சேவை செய்வது தான் முக்கியம். இன்றைக்கு ஆட்சியில் இருக்கிறோம். இந்த பாராளுமன்ற தேர்தலிலும் நாம் ஆட்சியை பிடிப்போம். நமது கட்சி நாடுமுழுவதும் விரிவடைந்து வலுவாக உள்ளது.இவ்வாறு அமித்ஷா பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து