முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானா அமைச்சரவை விரிவாக்கம் 10 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

செவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

ஐதராபாத், தெலுங்கானாவில் 10 புதிய உறுப்பினர்களுடன் தனது அமைச்சரவையை முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று விரிவாக்கம் செய்தார்.

தெலுங்கானா மாநிலத்தில் சமீபத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தெலுங்கானா ராஷ்டிர சமீதி கட்சி தனி மெஜாரிட்டியுடன் மீண்டும் ஆட்சியை பிடித்தது. தெலுங்கானா ராஷ்டிர சமீதி தலைவர் சந்திரசேகர ராவ் முதல்வராக பதவியேற்றார். அவருடன் ஒரே ஒரு அமைச்சரான முகமது மஹ்மூதுவும் பதவியேற்றார். அவருக்கு உள்துறை ஒதுக்கப்பட்டது. அதன் பின்னர் நீண்டகாலமாக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவில்லை.
சுமார் 2 மாத தாமதத்திற்கு பிறகு, முதல்வர் சந்திரசேகர ராவ், பவுர்ணமி நாளான பிப்ரவரி 19-ம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என அறிவித்தார்.

அதன்படி தெலுங்கானா மாநில அமைச்சரவையை நேற்று முதல்வர் சந்திரசேகர ராவ்விரிவாக்கம் செய்தார். இதில் 10 அமைச்சர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 6 பேர் புதுமுகங்கள். சந்திரசேகர ராவின் முந்தைய அமைச்சரவையில் இடம்பெற்ற இந்திரகரன் ரெட்டி, தலசானி சீனிவாஸ் யாதவ், ஜெகதீஷ் ரெட்டி மற்றும் ஏதலா ராஜேந்தர் ஆகியோர் மீண்டும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். கவர்னர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிய அமைச்சர்களுக்கு கவர்னர்  நரசிம்மன் பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதன் மூலம் அமைச்சரவையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து