முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 22-ம் தேதி முதன்முறையாக சந்திரனுக்கு விண்கலம் அனுப்பும் இஸ்ரேல்

செவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2019      உலகம்
Image Unavailable

டெல் அவிவ், சந்திரனில் ஆய்வு நடத்த இஸ்ரேல் முதன் முறையாக விண்கலம் அனுப்புகிறது. இந்திய நேரப்படி வரும் 22-ம் தேதி மதியம் 1.45 மணிக்கு இந்த விண்கலம் செலுத்தப்பட உள்ளது.

சந்திரனுக்கு இதுவரை ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே விண்கலத்தை அனுப்பி ஆய்வு மேற்கொண்டுள்ளன. அவற்றில் சீனா சந்திரனின் பின்புறத்தில் கடந்த ஜனவரி 3- ம் தேதி இறக்கி ஆய்வு மேற்கொண்டது. இந்த நிலையில் இஸ்ரேல் முதன் முறையாக சந்திரனுக்கு விண்கலம் அனுப்புகிறது. பெரிஷீட் எனப்படும் இந்த விண்கலம் 585 கிலோ எடை கொண்டது. இந்த விண்கலம் தனியார் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கேப் கானவெரலில் இருந்து சந்திரனுக்கு ஏவப்படுகிறது. இந்திய நேரப்படி வரும்  22-ம் தேதி மதியம் 1.45 மணிக்கு இந்த விண்கலம் செலுத்தப்பட உள்ளது. இந்த தகவலை இஸ்ரேல் விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து