முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அழகர்கோவிலில் தெப்பதிருவிழா. பக்தர்கள் தரிசனம்

செவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2019      தமிழகம்
Image Unavailable

அழகர்கோவில், -மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஒன்றானது ஆண்டு தோறும் மாசிமாதம் பவுர்ணமி  நிறை நாளில் தெப்பதிருவிழா நடைபெறுவது வழக்கம். அதன் படி இந்த வருடம் கடந்த 18ம்தேதி சிம்மலக்கனத்தில் கஜேந்திர மோட்சம் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று 19ம் தேதி காலை 9 மணிக்கு திருக்கோயிலிலிருந்து வர்ணகுடைகளுடன், கோவில் யானை சுந்தரவள்ளி முன் செல்ல மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் ஸ்ரீதேவி, பூமி தேவி சமேத கள்ளழகர் பெருமாள்  பல்லக்கில் புறப்பாடாகி தெப்பத்திற்கு சென்றார்.
இதில் வழி நெடுகிலும் ஏரளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பொய்கைகரைப்பட்டி கிராமத்தில் உள்ள மண்டூக தீர்த்தம் என்ற புஷ்கரணி தெப்பத்தின் குளக்கரையை சுற்றி வந்து, கிழக்கு பக்கமுள்ள மண்டபத்தில் எழுந்தருளினார்.  அங்கு பெருமாளுக்கும், தேவியர்களுக்கும் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன.  தொடர்ந்து மாலையில் வந்த வழியாகவே சென்று சுவாமி கோவிலுக்கு சென்று இருப்பிடம் சேர்ந்தார். இந்த விழாவில் கோவில் தக்கார் வெங்கடாசலம்,  நிர்வாக அதிகாரி மாரிமுத்து, வெள்ளியங்குன்றம் ஜமீன்தார் சண்முகராஜ பாண்டிய புலிகேசி மற்றும் திருக்கோவில் கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் கலந்து கலந்து கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து