முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திராவில் முன்னாள் பெண் மத்திய மந்திரி காங்கிரசில் இருந்து விலகல்

புதன்கிழமை, 20 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

அமராவதி : ஆந்திராவில் முன்னாள் மத்திய மந்திரி கில்லி கிருபாராணி காங்கிரசில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் அவர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேருகிறார்.  

ஆந்திராவை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் கில்லி கிருபாராணி. இவர் 2004-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தார்.

அதன் பின் 2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீகாகுளம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் 4 முறை எம்.பி.யாக இருந்த ஏரன் நாயுடுவை தோற்கடித்தார். மன்மோகன்சிங் அமைச்சரவையில் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை இணை மந்திரியாக பதவி வகித்தார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் (2014) தோல்வியை தழுவினார்.

இந்த நிலையில் கில்லி கிருபாராணி காங்கிரசில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் அவர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேருகிறார்.

இதையடுத்து அவர்   ஐதராபாத்தில் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து பேசினார். பின்னர் கிருபாராணி கூறும் போது, காங்கிரஸ் கட்சியில் இருந்து நான் விலகி உள்ளேன். ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் வருகிற 28-ந்தேதி எனது ஆதரவாளர்களுடன் சேருகிறேன்.  

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ள வாக்குறுதிகளால் ஈர்க்கப்பட்டும் தெலுங்கு தேசம் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் காங்கிரசில் இருந்து விலகி உள்ளேன்.

ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து விவகாரத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு திடீரென்று தனது நிலைப்பாட்டை மாற்றி கொண்டுள்ளார்.  இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து