முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் எடப்பாடி முன்னிலையில் தமிழக அரசிற்கும், பிரிட்டிஷ் கவுன்சிலுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

புதன்கிழமை, 20 பெப்ரவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் பல்வேறு திறன்களை மேம்படுத்த முதல்வர் எடப்பாடி முன்னிலையில் தமிழக அரசிற்கும், பிரிட்டிஷ் கவுன்சிலுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று கையெழுத்தானது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் மென்திறன் மேம்பாடு, ஆங்கில மொழி பேச்சுத்திறன் வளர்த்தல், வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தல், நூலகத்தின் பயன்பாட்டினை அதிகரித்தல், கலை மற்றும் பண்பாட்டு திறன் பகிர்வு மற்றும் திறன் வளர்த்தல் போன்றவை தொடர்பாக தமிழ்நாடு அரசிற்கும், பிரிட்டிஷ் கவுன்சிலுக்கும் இடையே முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தலைமைச் செயலகத்தில் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், தமிழ்நாடு அரசு சார்பாக உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, பிரிட்டிஷ் கவுன்சில் சார்பாக அதன் இயக்குநர் ஜனகா புஷ்பநாதன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

அமைச்சர்கள் பங்கேற்பு...

இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் (பொறுப்பு) இரா. வெங்கடேசன், பிரிட்டன் துணை உயர் ஆணையர் ஜெர்மி பில்மோர், பெட்போர்டு, தொழில்நுட்ப கல்வி ஆணையர் (முழு கூடுதல் பொறுப்பு) கே. விவேகானந்தன், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் உறுப்பினர் செயலர் ஆர். லில்லி, கல்லூரிக் கல்வி இயக்குநர் இரா. சாருமதி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து