முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 26 - ம் எதிர்கட்சி தலைவர்களை மீண்டும் சந்திக்கிறார் மம்தா பானர்ஜி

வியாழக்கிழமை, 21 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா : பா.ஜ.க.வுக்கு எதிரான கூட்டணி கட்சித் தலைவர்களை வரும் 26 - ம் தேதி மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மீண்டும் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற தேர்தல் வரும் நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.விற்கு இடையே மோதல்கள் வலுத்து வருகிறது.மேற்கு வங்காளத்தில் மோடிக்கு எதிராக மிகப்பெரிய எதிர்க்கட்சிகள் பேரணியை மேற்கு வங்காள முதல்வரும்,  திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நடத்தி காட்டினார். 

பிரம்மாண்ட பேரணி

ஒருங்கிணைந்த இந்தியா என்ற பெயரில் கடந்த மாதம் கொல்கத்தாவில் பா.ஜ.க.வுக்கு எதிரான பிரம்மாண்ட பேரணியை மம்தா பானர்ஜி நடத்தினார். இதில் நாடு முழுவதும் இருந்து பல்வேறு எதிர்கட்சிகளைச் சேர்ந்த 27 தலைவர்கள் பங்கேற்றனர். இதை தொடர்ந்து  அம்மாநிலத்தில்  நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மோடி மேற்கு வங்காளத்தில்  ஜனநாயகம் படுகொலை செய்யப்படுகிறது என கூறினார்.

மீண்டும் 26 - ல் கூட்டம்

இதை தொடர்ந்து சி.பி.ஐ. நடவடிக்கைகளுக்கு எதிராக 2 நாட்கள் மம்தா பானர்ஜி  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தற்போது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக மத்திய அரசு மீது திரிணாமூல்  காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.இந்நிலையில் மம்தா பானர்ஜியின் கட்சியான திரிணாமூல்

காங்கிரஸ் விடுத்துள்ள அறிக்கையில்,

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக மீண்டும் எதிர்கட்சித் தலைவர்களை சந்திக்க முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த சந்திப்பை வரும் 26-ம் தேதி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும்  அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து