முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி தொகுதி ஒதுக்கீடு - முதல்வர் - துணை முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

வியாழக்கிழமை, 21 பெப்ரவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை: அ.தி.மு.க கூட்டணியில் புதுச்சேரி மக்களவை தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முன்னிலையில் கையெழுத்தானது.

விரைவில் தேர்தல்...

நடப்பு பாராளுமன்றத்தின் பதவிகாலம் முடியவிருப்பதால் பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் தேர்தல் ஆணையத்திற்கு ஏற்பட்டுள்ளது. வெகு விரைவில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால்  தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. எந்த கட்சி யாருடன் சேர்ந்து கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட தொடங்கியது.

இந்நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை தேசிய, மாநில கட்சிகளுடன்  நடந்து வருவதாகவும் விரைவில் கூட்டணி பற்றி அறிவிப்போம் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருந்தார். அதன்படி கடந்த செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தைக்குப்பிறகு அ.தி.மு.க.வுடன் பா.ம.க. மற்றும் பா.ஜ.க. கட்சிகள் கூட்டணியில் இணைந்தன.

மெகா கூட்டணி...

அ.தி.மு.க. மெகா கூட்டணியுடன் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க இருக்கிறது. அ.தி.மு.க.  மெகா கூட்டணியில் இணைந்த பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதற்கிடையே, சென்னையிலுள்ள அ.தி.மு.க. அலுவலகத்துக்கு என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி இன்று மாலை வந்தார். கூட்டணி பற்றி அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினார். 

ஒப்பந்தம் கையெழுத்து...

இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேறி தொகுதியை ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது. அ.தி.மு.க. சார்பில் ஓபிஎஸ்-ஈபிஎஸ், என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் ரங்கசாமி ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. அ.தி.மு.க. கூட்டணியில் பாமகவுக்கு 7, பாஜகவுக்கு 5, என்.ஆர்.காங்கிரசுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் கூறுகையில், அ.தி.மு.க கூட்டணியில் புதுச்சேரி மக்களவை தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து