முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாக்.கை தோற்கடிக்க வேண்டும் : முன்னாள் வீரர் டெண்டுல்கர் பேட்டி

வெள்ளிக்கிழமை, 22 பெப்ரவரி 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : உலககோப்பையில் பாகிஸ்தானுக்கு 2 புள்ளிகளை கொடுப்பதை வெறுக்கிறேன்; இந்தியா, பாகிஸ்தானை தோற்கடிக்க வேண்டும் என சச்சின் டெண்டடுல்கர் தெரிவித்துள்ளார்.

40 துணை ராணுவ வீரர்கள்...

சமீபத்தில், காஷ்மீர் புல்வாமாவில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் இந்திய துணை ராணுவ படையினர் 40 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஒவ்வொரு இந்தியனின் நெஞ்சையும் கொதிக்க வைத்துள்ளது. பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அந்த நாட்டுடன் கிரிக்கெட் உறவை துண்டிக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது.

பி.சி.சி.ஐ ஆலோசனை

10 அணிகள் இடையிலான 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மே 30-ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்க பாகிஸ்தானுக்கு தடை விதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) கடிதம் எழுத திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் நேற்று ஆலோசனை நடத்தினர்.

கவாஸ்கர் வலியுறுத்தல்...

இது ஒரு பக்கம் என்றால், இன்னொரு புறம் உலக கோப்பை தொடரில் ஜூன் 16-ம் தேதி மான்செஸ்டரில் நடக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி ஆடக்கூடாது என்று முன்னாள் வீரர்கள் சவுரவ் கங்குலி, ஹர்பஜன்சிங் உள்ளிட்டோர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் நேற்று அளித்த ஒரு பேட்டியில் உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆடாமல் இரண்டு புள்ளியை இழந்தாலும் கூட அடுத்த சுற்றுக்கு முன்னேறக்கூடிய அளவுக்கு நமது அணி வலிமையாக இருப்பதை அறிவேன். ஆனால் இந்த போட்டியில் அவர்களை தோற்கடித்து அடுத்த சுற்றை எட்டாமல் இருக்க நாம் ஏன் முட்டுக்கட்டை போடக்கூடாது? என கூறினார்.

சச்சின் வலியுறுத்தல்...

இதுதொடர்பாக நேற்று சச்சின் டெண்டுல்கர் அளித்த பேட்டியில் கூறியதாவது;- உலக கோப்பையில் இந்தியா பாகிஸ்தானுக்கு எப்பொழுதும் ஏமாற்றத்தை மட்டுமே தருகிறது. மீண்டும் அவர்களை தோற்கடிக்க நல்ல நேரம் இது. நான் அவர்களுக்கு 2 புள்ளிகள் கொடுப்பதை வெறுக்கிறேன். விளையாடமல் விட்டால் அவர்களுக்கு உதவி செய்வதுபோல் ஆகிவிடும். எனக்கு இந்தியா எப்போதும் முதலில் வரவேண்டும், அதனால் என் நாடு என்ன முடிவு எடுக்குமோ நான் எனது முழு மனதோடு அந்த முடிவை ஆதரிப்பேன் என கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து